ஆப்பிரிக்காவில் மெஸ்ஸியின் முதல் கோல்..! அங்கோலாவை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அபாரம்!

அங்கோலா உடன் மோதிய ஆர்ஜென்டீன கால்பந்து அணி குறித்து...
Messi dribbling the ball from the opponent.
பந்தை எதிரணியிடம் இருந்து ட்ரிபிள் செய்யும் மெஸ்ஸி. படம்: இன்ஸ்டா / செலக்‌ஷன் ஆர்ஜென்டீனா / ஏஎஃப்ஏ
Published on
Updated on
1 min read

அங்கோலா உடன் மோதிய ஆர்ஜென்டீன அணி 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஒரு அசிஸ்ட், ஒரு கோல் அடித்து அசத்தினார்.

அங்கோலா நாட்டின் 50-ஆவது ஆண்டின் சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீன அணி நட்பு ரீதியான போட்டியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி, 44-ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட்டும் 82-ஆவது நிமிஷத்தில் ஒரு கோலும் அடித்தார்.

இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

மொத்தமாக மெஸ்ஸி 895 கோல்கள், 401 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.

  • ஐரோப்பா கண்டத்தில்தான் மெஸ்ஸி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்துள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.

  • ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், யுஎஇ, இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்துள்ளார்.

  • அமெரிக்காவில் 156 கோல்கள் அடித்துள்ளார். அமெரிக்காவில் 92, ஆர்ஜென்டீனாவில் 37. கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com