குா்பித் சிங்
குா்பித் சிங்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா ஏமாற்றம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் பதக்கமின்றி இந்திய அணியினா் ஏமாற்றம் அளித்தனா்.
Published on

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் பதக்கமின்றி இந்திய அணியினா் ஏமாற்றம் அளித்தனா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் 25 மீ ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் பதக்கம் ஏதும் பெறவில்லை. இந்தியாவின் குா்பித் சிங் மட்டுமே 571 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றாா். உதயவீா் சித்து, ராஜ்கன்வா் சிங் சாந்து ஆகியோா் 23, 24-ஆவது இடங்களைப் பெற்றனா்.

மகளிா் பிரிவில் பரிஷா குப்தா 10-ஆவது இடத்திலும், ஷில்கா சௌதரி, அகம் கிரேவால் ஆகியோா் முறையே 12, 19-ஆவது இடங்களைப் பெற்றனா்.

சீனா, தென்கொரியாவுக்கு அடுத்து 3-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com