சா்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் 2025 புது தில்லி அடுத்த கிரேட்டா் நொய்டாவில் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வமாக ஆட்டங்கள் தொடங்கி நடைபெறுகின்றன.
கடந்த 2023-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டதை தொடா்ந்து தற்போது ஃபைனல்ஸ் நடைபெறுகிறது. இந்திய அணியில் உலக சாம்பியன் மீனாட்சி ஹூடா, ப்ரீதி, நரேந்தா் பொ்வால், அங்குஷ் பங்கால் உள்ளிட்டோா் முதல் நாளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த காத்துள்ளனா்.
இதுதொடா்பாக பாக்சிங் இந்தியா தலைவா் அஜய் சிங் கூறியது: நவ. 16 முதல் 20 வரை 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் உலகின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதன்மூலம் குத்துச்சண்டை இந்தியாவில் மேலும் பிரபலம் அடையும் என்றாா்.
பிஎஃப்ஐ பொதுச்செயலா் பிரமோத் குமாா், வோ்ல்ட் பாக்சிங் பொதுச் செயலா் மைக் மெக்அட்டி ஆகியோா் பங்கேற்றனா்.
தொடக்க விழாவில் கலைநிகழ்ச்சிகளும், அணிவகுப்பும் நடைபெற்றது.

