

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையில் ஆறாவது முறையாக விளையாட இருக்கிறார்.
அவரது அணி நேற்றைய போட்டியில் ஆர்மீனியாவுடன் 9-1 என அபார வெற்றி பெற்றது.
ஐந்து முறை பேலந்தோர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது, ஆறாவது முறையாக விளையாட இருக்கிறார். 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் விளையாடியுள்ளார். ஆனால், இன்னும் கோப்பை வெல்லவில்லை.
அயர்லாந்து உடனான போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
இருப்பினும் அந்த அணி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையின் முதல் போட்டியிலும் ரொனால்டோ பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை அதிகமுறை ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள்
1. ஆண்டனியோ கார்பாஜல் - 5 (மெக்சிகோ)
2. ஆண்ட்ரேஸ் கார்டாடோ - 5 (மெக்சிகோ)
3. லோதர் மாத்தூஸ் - 5 (ஜெர்மன்)
4. ரஃபேல் மார்க்வெஸ் - 5 (மெக்சிகோ)
5. லியோனல் மெஸ்ஸி - 5 (ஆர்ஜென்டீனா)
6. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 5 (போர்ச்சுகல்)
தற்போது, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.