

கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி அணி வெளியேறியது. கடைசியாக 1997-இல் உலகக் கோப்பையில் விளையாடியது.
இந்த அணியின் நட்சத்திர வீரர் டொமினிக் சோபோஸ்லாய் கண்ணீருடன் விடைபெற்ற சம்பவம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஹங்கேரியாவின் புடாபெஸ்டில் நடைபெற கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 3, 37-ஆவது நிமிஷத்தில் ஹங்கேரி அணியினர் கோல் அடித்து அசத்தினர்.
அயர்லாந்து அணி 15, 80, 90+6-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து த்ரில் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் அயர்லாந்து பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் வென்றால் உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும்.
இந்தப் போட்டியில் முதலில் ஹங்கேரிய அணியின் வீரர் டொமினிக் சோபோஸ்லாய் ரொனால்டோ மாதிரி அயர்லாந்தை நோக்கி அழுகை சைகைக் காட்டினார்.
பின்னர் கடைசியில் அவரே கண்ணீருடன் விடைபெற்றார். இந்த நிகழ்வு கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.