

ஏடிபி இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
யுஎஸ் ஓபனில் தோல்வியுற்றதுக்கு யானிக் சின்னர் அல்கராஸை பழிதீர்த்துள்ளார்.
சின்கராஸ் 2025-இன் கடைசி போட்டி- சின்னரின் பக்கம்
இத்தாலியில் இனால்பி அரினா திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் நம்.2 வீரர் யானிக் சின்னர் 7-6 (4), 7-5 என்ற செட்களில் உலகின் நம்.1 வீரர் அல்கராஸை வீழ்த்தினார்.
இந்தாண்டின் சின்கராஸின் கடைசி பட்டம் யானிக் சின்னரின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தாண்டின் ஆஸி. ஓபன், விம்பிள்டன் கோப்பையை சின்னரும் யு.எஸ். ஓபன், பிரெஞ்சு ஓபனை அல்கராஸும் வென்றனர்.
இந்நிலையில், இந்தாண்டில் ஆறாவது முறையாக இருவரும் சந்திக்க, சின்னர் வெற்றி பெற்றார்.
அதிக வெற்றி யாருக்கு?
தனது சொந்த மண்ணில் சின்னர் வெற்றி பெற்றது அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை இருவரும் 16 முறை மோதியிருக்க 10 முறை அல்கராஸும் 6 முறை சின்னரும் வென்றுள்ளார்கள்.
இறுதிப் போட்டியில் சின்னர் தொடர்ச்சியாக 10ஆவது முறையாக வென்றுள்ளார். கடைசியாக ஜோகோவிச் உடன் 2023 இறுதிப் போட்டியில் தோற்றார்.
உள்ளரங்கு கடின தரைப் போட்டிகளில் சின்னர் தனது 31-ஆவது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.