32/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள் குறித்து...
Teams selected for the Football World Cup.
கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள். படம்: ஃபிஃபா.
Published on
Updated on
1 min read

2026-இல் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு இதுவரை 32 அணிகள் தேர்வாகியுள்ளன.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறுகின்றன.

48 அணிகள் எப்படி தேர்வாகின்றன?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் நார்வே, போர்ச்சுகல் அணிகள் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தின.

நார்வே அணி இத்தாலியை 4-1 என வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி ஆர்மீனியாவை 9-1 என வீழ்த்தியது.

கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா - 8, ஆப்பிரிக்கா - 9, வட, மத்திய அமெரிக்கா கரீபியன் - 3, தென் அமெரிக்கா - 6, ஓசினியா - 1, ஐரோப்பா - 16.

போட்டியை நடத்தும் 3 நாடுகளின் அணிகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான பிளே-ஆப்ஸ் மூலமாக 2 அணிகளுமாக, மொத்தம் (43+3+2) 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் தேர்வாக இருக்கின்றன.

இதுவரை தேர்வாகியுள்ள அணிகள்

  • போட்டியை நடத்தும் நாடுகள்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா.

  • ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்.

  • ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

  • வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன்: எதுவும் தேர்வாகவில்லை.

  • ஐரோப்பா: குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல்.

  • ஓசினியா: நியூசிலாந்து.

  • தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவாடர், பாராகுவே, உருகுவே.

Summary

So far, 32 teams have been selected for the 2026 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com