

ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிக்கு பலம்வாய்ந்த ஜெர்மனி அணி தேர்வாகியுள்ளது.
மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்தத்தொடரில், ஜெர்மனி 33-ஆவது அணியாக தேர்வாகியுள்ளது.
ஸ்லோவோகியா அணியுடன் மோதிய ஜெர்மனி அணி 6-0 என அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், 18, 29, 36, 41, 67, 79-ஆவது நிமிஷங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தார்கள்.
70 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி இலக்கை நோக்கி 14 முறை பந்தினை அடித்தது.
நான்குமுறை உலகக் கோப்பை வென்ற ஜெர்மணி அணி அபார வெற்றியுடன் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.