ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல்... 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து!

உலகக் கோப்பைக்குத் தேர்வான ஸ்காட்லாந்து அணி குறித்து...
Scotland's Scott McTominay celebrates with teammates after Kenny McLean scored their fourth goal in the 2026 World Cup European Qualifying match.
வெற்றிக் களிப்பில் ஸ்காட்லாந்து வீரர்கள். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஸ்காட்லாந்து அணி ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்து உலகக் கோப்பைக்குத் தேர்வானது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து அணி தனது சொந்த மண்ணில் டென்மார்க் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் முதல் 3-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து கோல் அடிக்க, 57-ஆவது நிமிஷ பெனால்டியில் டென்மார்க் சமன் செய்தது.

78-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து இரண்டாவது கோல் அடிக்க, 82-ஆவது நிமிஷத்தில் டென்மார்க் சமன்செய்தது.

90 நிமிஷத்தில் 2-2என இருந்தது. பின்னர் நிறுத்தல் (ஸ்டாப்பேஜ்) நேரத்தில் 90+3, 90+9-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து அற்புதமான கோல் அடித்து 4-2 என வென்றது.

இந்தப் போட்டியில் 64 சதவிகித பந்தினை டென்மார்க் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி நான்கு முறை மட்டுமே முயற்சித்தது.

இலக்கை விட்டு தவறுதலாக 20 முறை ஷாட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து அணி 13 புள்ளிகளுடன் உலகக் கோப்பைக்குத் தேர்வானது. கடைசியாக 1998-இல் விளையாடியது.

28 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்ததுக்கு ஸ்காட்லாந்து வீரர்கள் திடலைச் சுற்றிக் கொண்டாடினார்கள்.

இந்தத் திடலில் 50,000 பார்வையாளர்கள் இதைக் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

A stunning bicycle kick and two stoppage-time goals sealed Scotland's dramatic return to the World Cup after a 28-year wait.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com