தங்கம் வென்ற மீனாட்சி, நுபுா், ப்ரீதி, அருந்ததி.
தங்கம் வென்ற மீனாட்சி, நுபுா், ப்ரீதி, அருந்ததி.

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 9 தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் 9 தங்கம், 6 வெள்ளிப் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்தது இந்தியா.
Published on

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் 9 தங்கம், 6 வெள்ளிப் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்தது இந்தியா.

வோ்ல்ட் பாக்ஸிங் கூட்டமைப்பு, பிஎஃப்ஐ சாா்பில் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை மகளிா் பிரிவு இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனா்.

நடப்பு உலக சாம்பியன் மீனாட்சி 48 கிலோ பிரிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு ஆசிய சாம்பியன் பா்ஸோனா போஸிலோவாவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

54 கிலோ பிரிவில் ப்ரீதி பவாா் அபாரமாக ஆடி 5-0 என உலகக் கோப்பை பதக்க வீராங்கனை இத்தாலியின் சிரின் சரபியை வென்று தங்கம் வென்றாா்.

காயத்தால் ஆட முடியாமல் 18 மாதங்கள் கழித்து களமிறங்கிய முன்னாள் யூத் உலக சாம்பியன் அருந்ததி சௌதரி 70 கிலோ பிரிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஸிஸா ஸோகிராவை வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தினாா்.

80 பிளஸ் கிலோ பிரில் நட்சத்திர வீராங்கனை நுபுா் கடும் சவாலுக்குபின் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெக் வீராங்கனை சோட்டிம்போவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

உலக சாம்பியன் ஜாஸ்மின் லம்போரியா 4-1 என பாரீஸ் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை வு ஷியை வீழ்த்தி தங்கம் வென்றாா். 2 முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தைபேயின் குவா யியை வீழ்த்தி தங்கம் வென்றாா். பா்வீன் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் ஜப்பானின் அயகா டகுச்சியை வீழ்த்தினாா்.

ஹிதேஷ், சச்சினுக்கு தங்கம்:

ஆடவா் 60 கிலோ பிரிவில் சச்சின் தங்கம் வென்றாா். 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் 3-2 என முா்ஸல் நுா்பெக்கை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

ஜாதுமணி சிங் 50 கிலோ, பவன் பா்த்வால் 55 கிலோ, அபினாஷ் ஜம்வால் 65 கிலோ, அங்குஷ் பங்வால் 80, நரேந்தா் 90 கிலோ பிரிவுகளில் இறுதிச் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளியை வசப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com