

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 12-ஆவது பதக்கம் வென்றுள்ளது.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவில், இந்தியாவின் சௌா்ய சைனி 450.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான குஷாக்ரா சிங் ரஜாவத் 408.8 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா்.
ஜொ்மனியின் மத்தியாஸ் எரிக் உலக சாதனையுடன் (459.8) தங்கம் வெல்ல, உக்ரைனின் டிமிட்ரோ பெட்ரென்கோ வெண்கலப் பதக்கம் (439.3) பெற்றாா்.
முன்னதாக தகுதிச்சுற்றில் சைனி உலக சாதனையுடன் (584) முதல் நபராக இறுதிக்கு முன்னேறினாா். குஷாக்ரா 6-ஆவது வீரராக (575) இறுதிக்கு வந்தாா்.
போட்டியில் இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியா்கள் 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளனா். இதுதவிர, கோல்ஃபில் கிடைத்த தங்கமும் சோ்த்து இந்தியா 13 பதக்கங்களுடன், பட்டியலில் 6-ஆம் இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.