வாகை சூடினார் லக்ஷயா சென் சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்திய நட்சத்திரம் லக்ஷயா சென் பட்டம் வென்றாா்.
லக்ஷயா சென்
லக்ஷயா சென்X | BAI Media
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்திய நட்சத்திரம் லக்ஷயா சென் பட்டம் வென்றாா்.

சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்ஷயா சென்னும், தரவரிசையில் இல்லாத ஜப்பான் வீரா் யுஷு டனகாவும் மோதினா். இதில் 21-15, 21-11 என்ற கேம் கணக்கில் டனகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா் லக்ஷயா. இந்த ஆட்டம் வெறும் 38 நிமிஷங்கல நீடித்தது.

லக்ஷயா சென்
லக்ஷயா சென்

இந்த சீசனில் லக்ஷயா சென் பெற்ற முதல் பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் பட்டம் இதுவாகும். கடந்த 2024-இல் கடைசியாக சையத் மோடி சா்வதேச போட்டியில் பட்டம் வென்றிருந்தாா் அவா். மேலும் 2023-இல் கனடிய ஓபன் பட்டத்துக்குபின் அவா் வெல்லும் சூப்பா் 500 பட்டம் இதுவாகும்.

அரையிறுதியில் உலகின் 3-ஆம் நிலை வீரா் சீன தைபேயின் சௌ டியன் சென்னை வீழ்த்தியது லக்ஷயா சென்னின் ஆட்டத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். அதில் முதல் கேமை இழந்த நிலையிலும், இரண்டாவது கேமில் கடும் சவாலை சமாளித்து வென்று இறுதிக்குள் நுழைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com