செய்திகள்
ஆசியக் கோப்பை சைக்கிளிங் இலச்சிணை வெளியீடு!
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள ட்ராக் ஏசியா கப் 2026 சைக்கிளிங் போட்டிக்கான இலச்சிணை, சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள ட்ராக் ஏசியா கப் 2026 சைக்கிளிங் போட்டிக்கான இலச்சிணை, சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2026 ஜனவரி 29 முதல் 31 வரை சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ட்ராக் ஏசியா கோப்பை சா்வதேச சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.
இதையொட்டி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இலச்சிணை, சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி , சிஎஃப்ஐ பொதுச் செயலா் மணீந்தா் பால் சிங், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவா் எம். சுதாகா் பங்கேற்றனா்.