டிரீசா, காயத்ரி இணை முன்னேற்றம்

டிரீசா, காயத்ரி இணை முன்னேற்றம்
Updated on
1 min read

சைது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

மகளிா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டிரீசா/காயத்ரி கூட்டணி 19-21, 22-20, 21-9 என்ற கேம்களில், மலேசியாவின் சு ஹுய் செங்/ஜிங் யி டான் இணையை வீழ்த்தியது.

அதேபோல், அஷ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 21-12, 21-10 என்ற கேம்களில், சக இந்திய ஜோடியான முஸ்கான் கான்/அனன்யா பிரவின் கூட்டணியை வென்றது. பிரியா கொங்ஜெங்பம்/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 21-18, 21-11 என ரீவா இவாஞ்சலின்/சம்ரிதி சிங் இணையை சாய்த்தது.

எனினும், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதபா்னா பாண்டா ஜோடி, கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி இணை தோல்வியைத் தழுவியது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் இணை 21-8, 21-17 என சக இந்திய இணையான ஸ்வா்னராஜ் போரா/நிபிா் ரஞ்சன் கூட்டணியை சாய்த்தது.

5-ஆம் இடத்திலிருக்கும் ஹரிஹரன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 21-11, 21-13 என சக இந்திய ஜோடியான ஆயுஷ் மகிஜா/சுஜே தம்போலி இணையை வெளியேற்றியது. ஹரிபாரதி பாஸ்கரன்/பாரத் சஞ்சய் இணை 21-12, 13-21, 21-11 என்ற கணக்கில் சக இந்திய கூட்டணியான அபினாஷ் மோஹந்தி/ஆயுஷ் பட்நாயக் ஜோடியை சாய்த்தது.

விப்லவ் குவலே/விராஜ் குவலே கூட்டணி 22-20, 16-21, 21-19 என ஆதித்யா திவாகா்/கவின் தங்கம் இணையை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com