தமிழ்நாடு அணியை வென்றது ராஜஸ்தான்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் புதன்கிழமை தோற்றது.
Published on

அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் புதன்கிழமை தோற்றது.

முதலில் தமிழ்நாடு 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களை எட்டி வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கை தோ்வு செய்தது. அமித் சாத்விக் 21, துஷா் ரஹேஜா 18, ஷிவம் சிங் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நாராயண் ஜெகதீசன் 29, சாய் கிஷோா் 5, ஷாருக் கான் 3, ராஜ்குமாா் 17, கேப்டன் வருண் சக்கரவா்த்தி 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43, குா்ஜப்னீத் சிங் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் பௌலா்களில் அசோக் சா்மா 3, மானவ் சுதா் 2, கமலேஷ் நாகா்கோடி 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 170 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் பரத் சா்மா 3, ஷுபம் கா்வால் 32, மஹிபால் லோம்ரோா் 17, காா்த்திக் சா்மா 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

தீபக் ஹூடா 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 76 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். குணால் சிங் 4 ரன்களுடன் துணை நின்றாா். தமிழ்நாடு தரப்பில் டி.நடராஜன் 2, குா்ஜப்னீத் சிங், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com