பிரணய், உன்னட்டி வெற்றி

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், உன்னட்டி ஹூடா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
பிரணய், உன்னட்டி வெற்றி
Updated on
1 min read

லக்னெள: சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், உன்னட்டி ஹூடா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

முதல் சுற்றில், ஆடவர் ஒற்றையரில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் பிரணய் 21-15, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான சாஸ்வத் தலாலை வெளியேற்றினார். 4-ஆம் இடத்திலிருக்கும் கிரண் ஜார்ஜ் 21-17, 21-9 என்ற கேம்களில், இஸ்ரேலின் டேனியர் டுபோவென்கோவை வீழ்த்தினார்.

5-ஆம் இடத்திலிருக்கும் கே.ஸ்ரீகாந்த் 21-13, 21-10 என கவின் தங்கத்தை வென்றார். 6-ஆம் இடத்திலிருக்கும் தருண் மன்னெபள்ளி 21-7, 21-9 என சதீஷ்குமார் கருணாகரனை சாய்த்தார். மிதுன் மஞ்சுநாத் 21-18, 12-21, 21-10 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டிமிட்ரி பனரினை வெளியேற்றினார்.

மகளிர் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னட்டி ஹூடா 21-13, 21-18 என்ற கணக்கில், சக இந்தியரான ஆகர்ஷி காஷ்யப்பை தோற்கடித்தார். 7-ஆம் இடத்திலிருக்கும் ரக்ஷிதா ஸ்ரீ 21-12, 21-14 என்ற வகையில், ஷ்ரேயா லிலியை வீழ்த்தினார்.

8-ஆம் இடத்திலிருக்கும் அனுபமா உபாத்யாய 21-9, 21-9 என உகாண்டாவின் ஃபடிலா ஷமிகாவை வென்றார். இஷாராணி பருவா 14-21, 21-17, 21-16 என்ற கேம்களில், சீன தைபேவின் சியு டோங் டுங்கை சாய்த்தார்.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-5, 21-7 என்ற கணக்கில் சுஜித் சுப்ரமணியன்/திவ்யா சுப்ரமணியன் கூட்டணியை வெளியேற்றியது. 5-ஆம் இடத்திலிருக்கும் சதீஷ்குமார் கருணாகரன்/ஆத்யா வரியத் இணை 21-16, 21-5 என்ற கேம்களில், சக இந்தியர்களான ஆயுஷ் தாஷ்/பிரத்யாஷா பாண்டாவை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com