திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல்முறையாக யு-17 உலகக் கோப்பை வென்ற போர்ச்சுகல்! ரொனால்டோவும் வரலாறு படைப்பாரா?

யு-17 உலகக் கோப்பையை வென்ற போர்ச்சுகல் அணி குறித்து...

News image

யு-17 உலகக் கோப்பை வென்ற போர்ச்சுகல் அணியினர். - படம்: ஏபி

Updated On :28 நவம்பர் 2025, 3:46 pm IST

17 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பையை போர்ச்சுகல் அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

இதேமாதிரி சீனியர் உலகக் கோப்பையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கத்தாரில் நடைபெற்ற யு-17 இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியும் ஆஸ்திரியாவும் மோதின.

இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என வெற்றி பெற்றது. போட்டியின் 32-ஆவது நிமிஷத்தில் அன்சியோ கப்ராய் கோல் அடித்தார்.

பின்னர் ஆஸ்திரியா எவ்வளவோ முயன்றும் போர்ச்சுகல் அணியின் டிஃபென்ஸை தாண்டி கோல் அடிக்க முடியவில்லை.

இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக 48 நாடுகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, போர்ச்சுகல் 1989-இல் மூன்றாவது பிளே-ஆஃப்ஸ் வரைக்கும் முன்னேறி இருந்தது.

தற்போது, உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அடுத்தாண்டு ஃபிஃபா நடத்தும் சீனியர் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற இருக்கின்றன.

போர்ச்சுகல் அணி மிகுந்த பலம்வாய்ந்ததாக இருக்கிறது. இந்தமுறை ரொனால்டோ தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்லுமா என அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Summary

Portugal created history as they defeated Austria 1-0 to lift the U-17 World Cup trophy at the Khalifa International Stadium in Al Rayyan, Qatar. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.