திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பார்சிலோனா முதலிடத்துக்கு முன்னேற்றம்: ரபீனியா ஆட்ட நாயகன்!

லா லீகா தொடரில் பார்சிலோனாவின் அசத்தல் வெற்றி குறித்து...

News image

லாமின் யமால், டேனி ஓல்மா- ரபீனியா. - படங்கள்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா.

Updated On :30 நவம்பர் 2025, 3:22 pm IST

லா லீகா தொடரில் பார்சிலோனா அணி அலவெஸ் அணிக்கு திராக 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

126 ஆவது ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா அணி தனது புணரமைக்கப்பட்ட கேம்பா நோவா திடலில் விளையாடியது.

இந்தப் போட்டியில் அலவெஸ் அணி முதல் நிமிஷத்திலே கோல் அடிக்க, லாமின் யமால் 8-ஆவது நிமிஷத்தில் சமன்படுத்தினார்.

டேனியல் ஓல்மா 26, 90+3-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

காயத்திலிருந்த மீண்ட ரபீனியா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி அசிஸ்ட் செய்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா (34 புள்ளிகள்) லாலீகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரியல் மாட்ரிட் இரண்டாம் இடத்தில் கீழிறங்கியுள்ளது.

Summary

Barcelona beat Alaves 3-1 in La Liga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.