காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மெஸ்ஸிக்கு புஸ்கஸ் விருது தேவையில்லை..! கால்பந்தின் அரசன்!

கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸியின் உலக சாதனை குறித்து...

கால்பந்தின் அரசன் மெஸ்ஸி சித்திரிப்பு படம். - படம்: எக்ஸ் / ஃபேப்ரிசியோ ரோமானோ

Published On :

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி (வயது 38) புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஃபெரெங்க் புஸ்கஸ் வைத்திருந்த 404 அசிஸ்ட் (கோல் அடிக்க உதவி புரிதல்) என்ற சாதனையை முறியடித்து, அதிக அசிஸ்ட்டுகளைச் செய்த (405) உலகின் முதல் வீரராக மெஸ்ஸி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி தற்போது எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

இண்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்து தனது கால்பந்து வரலாற்றில் அதிக சிஸ்ட்டுகளைச் செய்த (405) முதல் வீரராக புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதுவரை 7 முறை (அதிகமுறையும் அதுதான்) மெஸ்ஸி இந்த விருதுக்கான பட்டியலில் இருந்தும் விருது ஏன் தரப்படவில்லை என்பது கேள்விக்குரியாக இருந்தது. இனிமேல் அந்த விருது மெஸ்ஸிக்கு தேவைப்படாதென அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கால்பந்தில் அதிக அசிஸ்ட்டுகள்...

1. லியோனல் மெஸ்ஸி - 405

2. ஃபெரென்ங் புஸ்கஸ் - 404

3. பீலே - 369

4. ஜோகன் க்ரூஃப் - 358

5. அலெக்ஸாண்ட்ரோ டி சௌஸா - 346

Summary

Lionel Messi (age 38) has set a new world record in football history.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.