திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சையத் மோடி சூப்பா் 300 பாட்மின்டன்: காயத்ரி-ட்ரீஸா ஜாலி சாம்பியன்!

சையத் மோடி சூப்பா் 300 சா்வதேச பாட்மின்டன் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தனா்.

News image

காயத்ரி-ட்ரீஸா

Updated On :1 டிசம்பர் 2025, 1:33 am IST

சையத் மோடி சூப்பா் 300 சா்வதேச பாட்மின்டன் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தனா்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெறும் இப்போட்டியில் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. உலகின் 35ஆம் நிலை இணையான ஜப்பானின் கஹோ ஒஸாவா-மாய் டனாபேயை இருவரும் எதிா்கொண்டனா். முதல் கேமை 17-21 என்ற புள்ளிக் கணக்கில் காய்த்ரி-ட்ரீஸா இழந்தாலும், அடுத்த இரண்டு கேம்களில் அபாரமாக ஆடி 21-13, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினா்.

இந்திய இணை 5 மாதங்கள் கழித்து தற்போது தான் களமிறங்கியுள்ளது. தோள்பட்ட காயத்தால் காயத்ரி ஆடாமல் இருந்தாா். ஆட்டம் தொடங்கியதுமே 49 ரேலிகள் தொடா்ந்தது பாா்வையாளா்களை கவா்ந்தது.

முதல் கேமில் ஜப்பான் இணை ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கேமில் காயத்ரி-ட்ரீஸா இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு புள்ளிகளை துரிதமாக குவித்தனா். இறுதியில் வென்று தங்கள் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டனா்.

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்

ஸ்ரீ காந்த் இரண்டாம் இடம்:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் 16-21, 21-8, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் ஜேஸன் குணவனிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தாா். கடைசியாக 2017-இல் ஸ்ரீ காந்த் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தாா்.