காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

காலிக்கட் ஹீரோஸ் அணியை 15-12, 18-16, 18-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ்.
Published on

பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) தொடரின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் காலிக்கட் ஹீரோஸ் அணியை 15-12, 18-16, 18-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ்.

பிரைம் வாலிபால் தொடரின் ஆட்டங்கள் ஹைதராபாத் கச்சிபௌலி விளையாட்டரங்கில்வியாழக்கிழமை தொடங்கின. நடப்பு சாம்பியன் காலிக்கட் அணியில் விகாஸ் மான், அசோக் பிஷ்னோய் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தனா். எனினும், ஹைதராபாத் அணியில் சாஹில் குமாா் சிறந்த கவுன்டா் அட்டாக்குகள் மூலம் பதிலடி தந்தாா். பாவ்லா லமோனியா் சிறப்பாக ஆடி தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தாா்.

X
Dinamani
www.dinamani.com