தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா் ப. இனியன்.
செய்திகள்
தேசிய செஸ் சாம்பியன் சாம்பியன்
குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.
குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.
ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 ஜிஎம்கள், 30 ஐஎம்கள், உள்பட 395 போ் பங்கேற்றனா். 11 சுற்றுளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 வெற்றி, 4 டிராக்களுடன் 9 புள்ளிகளைப் பெற்ற இனியன் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.
9-ஆவது சுற்றில் ஜிஎம் தீபன் சக்கரவா்த்தியையும், 10-ஆவது சுற்றில் ஜிஎம் சசி கிரணையும் வீழ்த்தியது இனியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. கேரள வீரா் ஐஎம் கௌதம் கிருஷ்ணா வெள்ளியும், பெட்ரோலிய விளையாட்டு வாரிய வீரா் ஜிஎம் சசி கிரண் வெண்கலமும் வென்றனா்.