
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா அணியை நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் நுனோ மென்டிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா அணியும் பிஎஸ்ஜி அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 19-ஆவது நிமிஷத்தில் ஃபெர்ரன் டோரஸ் கோல் அடிக்க, சென்னி மயிலு 39-ஆவது நிமிஷத்தில் 1-1 என சமன்செய்தார்.
பரபரப்பாகச் சென்ற போட்டியில் 90-ஆவது நிமிஷத்தில் கோன்சாலோ ராமோஸ் கோல் அடித்து 2-1 என பிஎஸ்ஜி முன்னிலை பெற்றது.
ஸ்டாபேஜ் டைம் 4 நிமிஷத்தில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவில்லை. லாமின் யாமில் செய்த சிறப்பாக அசிஸ்ட்டினை கோல் ஆக மாற்ற ஃபெர்ரன் டோரஸ் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது
பிஎஸ்ஜி அணியின் டிஃபெண்டிங் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.