2026 ஃபிஃபா உலகக் கோப்பை: சென்சார் பதிந்த கால்பந்து அறிமுகம்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிக்கான கால்பந்து குறித்து...
Football for the 2026 FIFA World Cup.
2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கால்பந்து. படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா.
Published on
Updated on
1 min read

2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான பந்தை ஃபிஃபா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பந்து போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற இருக்கின்றன.

மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் ஜூன் 11, 2026-இல் தொடங்குகின்றன. இந்தப் போட்டிகளுக்காக பிரத்யேகமான கால்பந்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்தப் பந்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • டிரையான்டா எனப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நாட்டினைப் பிரதிபலிக்கும் வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • சிப்புகள் பொருத்தப்பட்ட ’கனெக்டட் பால்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிரையான்டா என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் மூன்று அலைகள் எனப் பெயர். சிவப்பு நிறம் கனடாவையும், பச்சை நிறம் மெக்சிகோவையும், நீல நிறம் அமெரிக்காவையும் குறிக்கின்றன.

உலகக் கோப்பைக்கான ஒவ்வொரு டிக்கெட் விற்பனையிலும் ஒரு அமெரிக்க டாலரை ஃபிஃபா உலக குழந்தைகள் திட்டத்திற்கு அளிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிஃபா தலைவர் ஜியோனி இன்ஃபான்டினோ இந்தப் பந்தினை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் பந்தை அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் பொறுத்தப்பட்ட 500 ஹெர்ட்ஜ் மோசன் சென்சார் மூலம் பந்தின் நகர்வுகளைக் கண்டறியலாம். மேலும், விஏஆர் முடிவுகளை துல்லியமாக எடுக்க உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The countdown to the game-changing FIFA World Cup 26™ has reached its latest significant milestone with the launch of the adidas TRIONDA, the Official Match Ball of the competition.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com