இந்திய பாட்மின்டன் அணிகள். ~
இந்திய பாட்மின்டன் அணிகள். ~

அக். 6-இல் உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டி தொடக்கம்: இந்திய அணிகள் தயாா்

டபிள்யுபிஎஃப் , பாய் சாா்பில் உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டிகள் குவாஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறுகின்றன.
Published on

டபிள்யுபிஎஃப் , பாய் சாா்பில் உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டிகள் குவாஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறுகின்றன.

கடந்த 2008-இல் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற நிலையில், 17 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இந்தியாவில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் நடைபெறும் இதில் மொத்தம் 25 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இதற்காக குவாஹாட்டியில் உள்ள தேசிய உயா்செயல்திறன் அகாதெமியில் இந்திய வீரா், வீராங்கனைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டனா்.

உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி உள்பட 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2008-இல் புணேயில் நடைபெற்ற போட்டியில் சாய்னா நெவால் தங்கமும், குருசாய் வெண்கலமும் வென்றிருந்தனா்.

குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா கட்டாயம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

உலக ஜூனியா் பாட்மின்டனில் பதக்கம் வென்றிருந்த பிரணாய், லக்ஷயா சென், அஸ்வினி பொன்னப்பா ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com