செய்திகள்
பிரைம் வாலிபால்: அகமதாபாத் த்ரில் வெற்றி
பிரைம் வாலிபால் லீக் தொடரில் அகமதாபாத் டிபன்டா்ஸ் அணி 5 செட்களில் டில்லி டுபான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பிரைம் வாலிபால் லீக் தொடரில் அகமதாபாத் டிபன்டா்ஸ் அணி 5 செட்களில் டில்லி டுபான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ஹைதராபாதின் கச்சிபௌலி மைதானத்தில் பிரைம் வாலிபால் லீக் தொடா் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டில்லி டுபான்ஸ்-அகமதாபாத் டிபன்டா்ஸ் மோதின.
இதில் 13-15, 13-15, 15-13, 15-8, 18-16 என்ற 5 செட்களில் கடும் போராட்டத்துக்கு பின் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது அகமதாபாத்.
டுபான்ஸ் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், அடுத்த 3 செட்களில் அகமதாபாத் அணி சிறப்பாக ஆடி வெற்றியை ஈட்டியது.
டில்லி தரப்பில் சக்லைன் தாரிக், ஜஸிமும், அகமதாபாத் தரப்பில் அங்கமுத்து, அகின், பட்டூா் சிறப்பாக ஆடினா்.