பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

மஞ்சு ராணி, அஸ்ஸாம் வீராங்கனை அங்குஷிதா போரோ ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா
Published on
Updated on
1 min read

பிஎஃப்ஐ கோப்பை குத்துச்சண்டை போட்டியில், ரயில்வேஸின் மஞ்சு ராணி, அஸ்ஸாம் வீராங்கனை அங்குஷிதா போரோ ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.

முன்னதாக அரையிறுதியில், மஞ்சு ராணி 5-0 என ஹரியாணாவின் மஹி சிவச்சை சாய்க்க, உலக யூத் சாம்பியனான அங்குஷிதா 5-0 என ஹிமாசல பிரதேசத்தின் ஷ்ரெதிமா தாகுரை வீழ்த்தினாா்.

ஹரியாணாவின் பிரியா - தில்லியின் ஜோதியையும், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவரும், இந்திய விளையாட்டு ஆணைய போட்டியாளருமான பா்வீண் ஹூடா - மத்திய பிரதேசத்தின் மஹி லாமாவையும் அதே புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தனா்.

ஆடவா் பிரிவு காலிறுதியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரும், சா்வீசஸ் வீரருமான அமித் பங்கால் - சக சா்வீசஸ் வீரா் உஸ்மான் அன்சாரியை 4-1 என்ற கணக்கில் வென்றாா். அதே அணியின் எஸ்.விஸ்வநாத் - தமிழகத்தின் சி.லுகாஸையும், முகமது ஹசாமுதின் - ஹெந்தோய் சிங்கையும் சாய்த்து அரையிறுதிக்கு வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com