
முகமது சாலா அசத்தல் பங்களிப்பினால் எகிப்து கால்பந்து அணி 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத எகிப்து அணி தற்போது மீண்டும் கம்பேக் அளித்து அசத்தியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் இருந்து நேரடியாக 9 அணிகளும் பிளே-ஆஃப்ஸ் மூலம் 1 அணியும் என மொத்தமாக 10 அணிகள் தேர்வாக இருக்கின்றன.
ஏற்கெனவே, இந்தக் கண்டத்தில் இருந்து மொராக்கோ, துனிசியா தேர்வாகியுள்ளன.
இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் எகிப்து தேசிய அணியும் ஜிபூட்டி தேசிய அணியும் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று (அக்.8) மோதின.
இந்தப் போட்டியில் எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா இந்தப் போட்டியில் 14, 84-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில் 3-0 என எகிப்து வென்றது. அத்துடன் நான்காவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
இதற்கு முன்பாக எகிப்து கால்பந்து அணி 1934, 1990, 2018-ஆம் ஆண்டுகளில் தேர்வாகியிருந்தது.
லிவர்பூல் அணிக்காக விளையாடும் முகமது சாலா ’எகிப்திய அரசன்’ என கால்பந்து ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
2026 உலகக் கோப்பையில் இந்த அணியை எவ்வளவு தூரம் அவர் அழைத்துச்செல்கிறார் என்பதைப் பார்க்க உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.