
கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியான பிரேசில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது, அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, புதிய தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி தலைமையேற்ற பிறகு வெற்றிகள் குவியத் தொடங்கியுள்ளன.
ஃபிஃபா உலகக் கோப்பையை பிரேசில் அணி ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக ஜெர்மனி, இத்தாலி 4 முறையும் ஆர்ஜென்டீனா 3 முறையும் வென்றுள்ளன.
சமீப காலமாக பிரேசில் அணி மோசமாக விளையாடி வந்தது. கடந்த உலகக் கோப்பை காலிறுதியில் பெனால்டியில் தோற்று வெளியேறியது.
நெய்மர் இல்லாத பிரேசில் அணி கடுமையான தோல்வியைச் சந்தித்தது. பின்னர், தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்பட்டார்.
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி வந்தபிறகு 3 வெற்றி, 1 சமன், 1 தோல்வியைத் தழுவியுள்ளது.
நேற்றிரவு பிரேசில் அணிக்கும் தென் கொரியா அணிக்கும் நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது. இதில் 5-0 என பிரேசில் வென்றது.
இந்தப் போட்டியில் எஸ்டாவோ 13, 47-ஆவது நிமிஷங்களிலும் ரோட்ரிகோ 41, 49-ஆவது நிமிஷங்களிலும் வினிசியஸ் 77-ஆவது நிமிஷங்களிலும் கோல் அடித்தார்கள்.
ரியல் மாட்ரிட் அணியில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த ரோட்ரிகோ ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
காயம் காரணமாக தேசிய அணியில் இடம்பெறாமல் இருக்கும் நெய்மர், “பிரேசில் கால்பந்தின் அடுத்த மிகப்பெரிய திறமைசாலியாக எஸ்டாவோ இருப்பார். அவர் மிகச்சிறந்த அறிவாளி” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.