
பிரான்ஸின் நட்சத்திர கால்பந்து வீரர் கிளியன் எம்பாப்பே உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
இருப்பினும் இந்தப் போட்டியின் கடைசி நேரத்தில் காயத்தினால் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஃபிஃபா 2026 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐரோப்பா கண்டத்தின் குரூப் டி பிரிவில் பிரான்ஸ் அணியும் அஜர்பைஜான் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் 3-0 என வென்றது. இதில் கிளியன் எம்பாப்பே 45+2-ஆவது நிமிஷத்தில் சிறப்பான கோல் அடித்தார்.
பின்னர், இரண்டாம் பாதியில் தனது வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தினால் 83-ஆவது நிமிஷத்தில் வெளியேறியதால், அடுத்த கட்ட போட்டிகளில் எம்பாப்பே பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட் அணியும் மோதும் எல்கிளாசிகோ போட்டியும் அக்.26-இல் வரவிருக்கிறது.
26 வயதாகும் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக 10 போட்டிகளில் கோல் அடித்துள்ளார். அதில் 14 கோல்கள், 4 அசிஸ்டுகளும் அடங்கும்.
மொத்தமாக எம்பாப்பே 53 கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
1. ஆலிவர் ஜிரௌட் - 57 கோல்கள்
2. கிளியன் எம்பாப்பே - 53 கோல்கள்
3. தியெரி ஹென்ரி - 51 கோல்கள்
4. ஆண்டனியோ கிரீஸ்மென் - 44 கோல்கள்
5. மைக்கேல் பிளாடனி - 41 கோல்கள்
குரூப் டி பிரிவில் பிரான்ஸ் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.