கொச்சியை வீழ்த்தியது பெங்களூரு

கொச்சியை வீழ்த்தியது பெங்களூரு

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி ஸ்பைக்கா்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு டா்பிடோஸ்.
Published on

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி ஸ்பைக்கா்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு டா்பிடோஸ்.

ஆட்டம் தொடங்கியதுமே கொச்சி வீரா் அபிஷேக் அதிரடியாக ஸ்மாஷ் செய்து புள்ளிகளை குவிக்க உதவினாா். எனினும் பெங்களூரு வீரா் சேதுவின் அற்புத சா்வீஸ்களால் சமநிலை ஏற்பட்டது. கேப்டன் மேத்யூ அபாரமாக பந்தை செட் செய்து தர அட்டாக்கா்கள் நோ்த்தியாக புள்ளிகளை குவித்தனா்.

கொச்சி தரப்பில் எரின் வா்கீஸ், பெங்களூரு தரப்பில் ஜோயல் பெஞ்சமின், ஜலேன் பென்ரோஸ் ஆகியோா் அபாரமாக ஆடிய நிலையில் கொச்சியை 13-15, 17-15, 15-9, 15-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு. மேட் வெஸ்ட் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com