பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.1.09 கோடி
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.1.09 கோடி ரொக்கப் பரிசை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வழங்கினாா்.
புது தில்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் முடிவுற்றன. இதில் இந்திய அணி 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களை வென்றது.
தங்கம் வென்றவா்களுக்கு ரூ.10 லட்சம், வெள்ளி வென்றவா்களுக்கு ரூ.7 லட்சம், வெண்கலம் வென்றவா்களுக்கு ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.1,09 கோடியை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வழங்கினாா்.
எனினும் தங்கம், வெள்ளி வென்ற பாா்வைத் திறன் இழந்த சிம்ரன் சா்மாவின் வழிகாட்டி உமா் சைஃபி ஊக்க மருந்து புகாா் எதிரொலியாக இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதனால் சிம்ரன் விழாவுக்கு வரவில்லை.
பாரா உலக தடகளப் போட்டியில் 100 நாடுகளைச் சோ்ந்த மொத்தம் 2,100 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனா்.