
எம்எல்எஸ் தொடரில் இதுவரை யாரும் நிகழ்த்தாத பல சாதனைகளை லியோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.
அட்லாண்டா யுனைடெட் அணியுடனான போட்டியில் 4-0 என இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்த மெஸ்ஸி, ஆட்ட நாயகன் விருது வென்றார். மொத்தமாக மெஸ்ஸி தன் கால்பந்து வரலாற்றில் 886 கோல்கள், 396 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.
எம்எல்எஸ் தொடரின் வரலாற்றிலே முதல்முறையாக ஒரே சீசனில் 9 முறையாக 2 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
38 வயதாகும் மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இந்த சீசனில் மட்டுமே 26 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
பெனால்டியே அடிக்காமல் இவ்வளவு கோல்கள் அடித்தவர் என்ற வித்தியாசமான சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.