
முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு கேப் வெர்டேவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வான இரண்டாவது மிகச் சிறிய நாடாக கேப் வெர்டே வரலாறு படைத்துள்ளது.
140 கோடி மக்கள்தொகை உள்ள இந்திய அணி இன்னும் ஒருமுறைக் கூட தேர்வானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5.25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே அணி குரூப் டி பிரிவில் எஸ்வாடினி அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் கேப் வெர்டே 3-0 என வெற்றி பெற்றது. எரிமலைகள் அடங்கிய தீவுக்கூட்டம் நிறைந்த வடக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ளது இந்த நாடு.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மொத்தம் 9 அணிகள் உலகக் கோப்பைக்குத் தேர்வாகும். 8 அணிகள் நேரடியாகவும் 1 அணி பிளே-ஆஃப்ஸ் மூலமாகவும் தேர்வாகும்.
இந்த அணிக்கு ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.