
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அதிகமான கோல்களை அடித்து வரலாறு படைத்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (40 வயது) ஹங்கேரிக்கு எதிரான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் 22, 45+3-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் (41) அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.
இருப்பினும் இந்தப் போட்டி, ஹங்கேரி ஸ்டாபேஜ் டைமில் கோல் அடித்து 2-2 என சமநிலைப்படுத்தியது.
இந்தப் போட்டியில் 66 சதவிகிதம் பந்தினை போர்ச்சுகல் அணியினரே தங்களது வசம் வைத்திருந்தனர்.
ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் 143 கோல்களும் மொத்தமாக 948 கோல்களையும் நிறைவு செய்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ - 41*
கார்லோஸ் ரூயுஸ் : 39
லியோனல் மெஸ்ஸி : 36
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.