
ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிகமான அசிஸ்ட்டுகளைச் செய்து நெய்மரின் சாதனையை முறியடித்துள்ளார்.
நட்பு ரீதியான சர்வதேச போட்டிகளில் ஆர்ஜென்டீனாவும் போர்டோ ரிகோ அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா 6-0 என அபார வெற்றி பெற்றது. இதில், மெக் அலிஸ்டர் (14’,36’) மோனிடெல் (23’), மார்டினீஸ் (79’, 84’) நிமிஷங்களில் கோல் அடித்தார்கள்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 23,84-ஆவது நிமிஷங்களில் மெஸ்ஸி அசிஸ்ட் செய்து அசத்தினார்.
இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக அசிஸ்ட்டுகளைச் (60) செய்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக அசிஸ்ட்டுகள்
1. லியோனல் மெஸ்ஸி - 60
2. நெய்மர் ஜூனியர் - 58
3. லண்டன் டோனவன் - 58
4. ஃபெரென்க் புஸ்கஸ் - 53
5. சாண்டர் கோசிஸ் - 51
கிளப் மற்றும் சர்வதேச போட்டிகள் என மொத்தமாக மெஸ்ஸி 398 அசிஸ்ட்டுகளைச் செய்து இரண்டாமிடம் வகிக்க, புஸ்கஸ் இந்தப் பட்டியலில் (404) முதலிடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.