
ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா, ஞான தத்து உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
3-ஆவது சுற்றில், மகளிர் ஒற்றையரில் தன்வி சர்மா 15-12, 15-7 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் லூசியா ஜோவான்கா சாண்டியை வீழ்த்தினார். உன்னட்டி ஹூடா 15-8, 15-5 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஆலிஸ் வாங்கை வெளியேற்றினார்.
ரக்ஷிதா ஸ்ரீ 11-15, 15-5, 15-8 என்ற வகையில் சிங்கப்பூரின் ஜகாரியா ஆலியாவை வென்றார்.
ஆடவர் ஒற்றையரில், தங்கர ஞான தத்து 11-15, 15-6, 15-11 என்ற கேம்களில், சக இந்தியரான சூர்யக்ஷ் ராவத்தை வென்றார். ஹமர் லால்தஸýவாலா, ரெüனக் செளஹான் ஆகியோர் தோல்வியைத் தழுவினார்.
மகளிர் இரட்டையரில், ஆனியா பிஷ்த்/ஏஞ்செல் புனெரா 16-14, 12-15, 15-5 என்ற வகையில் சீன தைபேவின் ஹுய் சின் ஹுவாங்/பெய் சுன் சாய் கூட்டணியை வீழ்த்தினர். அதேபோல், பாவ்யா சாப்ரா/விசாகா டோப்போ ஜோடி 15-13, 15-11 என்ற கேம்களில் டென்மார்க்கின் அஸ்கே ரோமர்/ஜாஸ்மின் வில்லிஸ் இணையை சாய்த்தது.
வென்னலா கலகோட்லா/ரெஷிகா உதயசூரியன் ஜோடி 15-8, 15-10 என ஜப்பானின் சயாகா எனோமோடோ/மிகு யாஷிமா இணையை வீழ்த்தியது. போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த காயத்ரி ராவத்/மானசா ராவத் இணை தோல்வி கண்டது.
ஆடவர் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் பார்கவ் ராம்/விஷ்வா தேஜ் இணை 11-15, 15-10, 15-10 என்ற வகையில் ஜப்பானின் ஷுங்கி ஹகிவரா/மஹிரோ மட்சுமோடோ கூட்டணியை வீழ்த்தியது. கலப்பு இரட்டையரில் லால்ரம்சங்கா/தாரினி சுரி இணை தோல்வி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.