யு-20 ஃபிஃபா உலகக் கோப்பை: இறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!

யு-20 கால்பந்து உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறிய ஆர்ஜென்டீனா பற்றி...
Poster of the U-20 Argentina team that advanced to the final.
இறுதிக்கு முன்னேறிய யு-20 ஆர்ஜென்டீன அணியின் போஸ்டர். படம்: எக்ஸ் / ஏஎஃப்ஏ
Published on
Updated on
1 min read

யு-20 கால்பந்து உலகக் கோப்பையின் அரையிறுதியில் 1-0 என வென்று, இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா முன்னேறியுள்ளது.

இன்டர் மியாமி அணியில் விளையாடும் ஆர்ஜென்டீன வீரர் கோல் அடித்து அசத்தினார்.

யு-20 உலகக் கோப்பைக்கான அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மேடியோ சில்வெட்டி கோல் அடித்து அசத்தினார்.

இவர் சமீபத்தில் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி அணியில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதின.

அந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிய ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. அதில் மொராக்கோ 5-4 என த்ரில் வெற்றி பெற்றது.

யு-20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொராக்கோ அணியும் ஆர்ஜெண்டீனாவும் அக்.20ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மோதவிருக்கிறது.

ஆடவர் கால்பந்து உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா வென்றது. அதேபோல் யு-20 உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துமா என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Summary

Argentina have advanced to the final of the U-20 World Cup after winning 1-0 in the semi-finals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com