
யு-17 இந்திய கால்பந்து மகளிரணி முதல்முறையாக ஆசிய கோப்பைக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுடன் இந்த வெற்றியைக் கொண்டாடிய இவர்களது விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என வெள்ளிக்கிழமை இரவு (அக்.17) த்ரில் வெற்றி பெற்றது.
38-ஆவது நிமிஷத்தில் உஸ்பெகிஸ்தான் கோல் அடிக்க, 55ஆவது நிமிஷத்தில் மாற்று வீராங்கனையாக வந்தவர் கோல் அடித்து சமன்படுத்தினார்.
பின்னர், 66ஆவது நிமிஷத்தில் அனுஷ்கா குமாரி அசத்தலால் 2-1 என முன்னேறியது.
குரூப் ஜி பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்து தகுதிபெற்றது. சீனாவில் அடுத்தாண்டு நடைபெறும் ஏஎஃப்சி தொடரில் இந்தியா விளையாடுகிறது.
கடைசியாக 2005-இல் 11 அணிகள் நேரடியாக பங்கேற்றதில் விளையாடி இருந்தது. தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வாகியுள்ளது.
இந்த வெற்றியை இந்திய மகளிரணி ஏ.ஆர்.ரஹ்மானின் Maa Tujhe Salaam வந்தே மாதரம் என்ற ஹிந்தி வெர்ஷனின் பாடலைப் பாடி கொண்டாடினார்கள்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் கடைசியாக தக் லைஃப் படத்தில் இசையமத்திருந்தார்.
அடுத்ததாக ராமாயணம் உள்பட 10 படங்களுக்கும் அதிகமானவற்றில் வேலை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.