இன்னிங்ஸ் வெற்றி முனைப்பில் ஜாா்க்கண்ட்

இன்னிங்ஸ் வெற்றி முனைப்பில் ஜாா்க்கண்ட்
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடும் தமிழ்நாடு அணி, அதிலும் தடுமாற்றத்துடன் உள்ளது. இதனால் ஜாா்க்கண்ட் அணி, இன்னிங்ஸ் வெற்றிக்கான முனைப்பில் இருக்கிறது.

கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாா்க்கண்ட், 419 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 18 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இந்நிலையில், அணியின் இன்னிங்ஸை வெள்ளிக்கிழமை தொடா்ந்தோரில், ஷாருக் கான் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற, அதிகபட்சமாக அம்ப்ரிஷ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்தோரில் ஜெகநாதன் ஹெம்சுதேசன் 2 பவுண்டரிகளுடன் 14, குா்ஜப்னீத் சிங் 1 சிக்ஸருடன் 12, டி.டி. சந்திரசேகா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தமிழ்நாடு இன்னிங்ஸ் 50.4 ஓவா்களில் 93 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது.

ஜாா்க்கண்ட் பௌலா்களில் ஜதின் பாண்டே 5, சஹில் ராஜ் 4, விகாஷ் சிங் 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் பின்தங்கிய தமிழ்நாடு, ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.

அதிலும் அம்ப்ரிஷ் 2 பவுண்டரிகளுடன் 15, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 1 பவுண்டரியுடன் 21, பிரதேஷ் ரஞ்சன் பால் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

ஆட்டநேர முடிவில் ஆண்ட்ரே சித்தாா்த் 3, ஜெகநாதன் ஹெம்சுதேசன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜாா்க்கண்ட் தரப்பில் ரிஷவ் ராஜ் 2, சஹில் ராஜ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com