
லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடுத்து, 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் முலமாக பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் 13-ஆவது நிமிஷத்தில் பெட்ரி கோல் அடித்தார். 20-ஆவது நிமிஷத்தில் கிரோனா அணியின் அசெல் விக்செல் கோல் அடித்து சமன்படுத்தினார்.
பின்னர், இரண்டு அணிகளும் போராடி 90 நிமிஷம் வரை எந்த கோலும் அடிக்க முடியவில்லை.
ஸ்டாபேஜ் நேரத்தில் 90+3-ஆவது நிமிஷத்தில் ரொனால்டு அரௌகா சிறப்பான கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 22 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.