
குவாஹாட்டி: ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சா்மா (16) இறுதி ஆட்டத்தில் போராடி தோல்வியடைந்தார்.
மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தன்வி சா்மா 7-15 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அன்யபட் பிசிட்பிரீசசாக்கிடம் வீழ்ந்தார். எனினும், அவர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடந்த காலங்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும், இன்னொரு வீராங்கனை அபர்னா போபட் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.