
எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி முதல்முறையாக தங்கக் காலணி விருது வென்று வரலாறு படைத்துள்ளார்.
கிளப் போட்டிகளில் லா லீகா தொடருக்குப் பிறகு தனது முதல் கோல்டன் பூட் (தங்கக் காலணி) வென்றுள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) எம் எல் எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.
இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள், 16 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தினார். அதிக கோல்கள், அதிக அசிஸ்ட்ஸ் செய்து அசத்திய மெஸ்ஸிக்கு கோல்டன் பூட் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த சீசனில் 21 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இரண்டாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்தும் அசத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.