
எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி தனது இரண்டாவது ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இன்டர் மியாமி தனது கடைசி லீக் போட்டியை 5-2 என்ற அபார வெற்றியுடன் முடித்தது.
எம்எல்எஸ் தொடரில் ஜியோதாஸ் பூங்காவில் நடைபெற்ற போட்டியில் நாஷ்வில்லியும் இன்டர் மியாமியும் மோதின.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 34, 63 (பெனால்டி), 81-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
ஹாட்ரிக் மட்டுமில்லாமல் 1 அசிஸ்ட் செய்து அசத்திய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
இந்த சீசனில் இத்துடன் 21-ஆவது ஆட்ட நாயகன் விருது வென்று வரலாறு படைத்துள்ளார்.
லீக் சுற்றில் 65 புள்ளிகளுடன் இன்டர் மியாமி உள்பட இரண்டு அணிகள் இந்தத் தொடரை முடித்தது. 66 புள்ளிகளுடன் பிளடெல்ஃபியா முதலிடம் பிடித்தது.
மெஸ்ஸி கடைசியாக கடந்த அக்டோபரில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். இன்று இரண்டாவது முறையாக ஹாட்ரிக் அடித்து அசத்தினார்.
இந்த சீசனில் இன்டர் மியாமி 19 வெற்றிகள், 8 சமன்கள், 7 தோல்விகளைப் பெற்றது.
கடந்த சீசனில் சப்போர்டர்ஸ் ஷீல்டு வென்ற மியாமி இந்த முறை ஒரு புள்ளியில் அதனை இழந்தது.
அடுத்து, பிளே -ஆப்ஸ் சுற்றில் விளையாடும் மியாமி எம்எல்எஸ் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.