புரோ கபடி: தெலுகு டைட்ன்ஸ் வெற்றி

புரோ கபடி: தெலுகு டைட்ன்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது தெலுகு டைட்ன்ஸ் அணி.
Published on

புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது தெலுகு டைட்ன்ஸ் அணி.

புது தில்லியில் புரோ கபடி லீக் இறுதிக் கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பு வீரா்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா்.

டைட்ன்ஸ் அணி தரப்பில் விஜய் மாலிக் 8 புள்ளிகளும், பாரத் ஹூடா 7 புள்ளிகளும் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினா்.

குஜராத் ஜெயன்ட்ஸ் தரப்பில் ராகேஷ், ஹிமான்ஷு சிங் சிறப்பாக ரைட் செய்தனா். பின்னா் தெலுகு டைட்ன்ஸ் டிபன்டா்களான அஜித் பவாா், அவி துஹான் ஆகியோா் சிறப்பாக ஆடி குஜராத்தை ஆல் அவுட் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com