காலிறுதியில் முசோவா, நோஸ்கோவா

Published on

ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் கரோலின் முசோவா, லிண்டா நோஸ்கோவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், முசோவா 6-3, 7-5 என ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்டை வீழ்த்த, நோஸ்கோவா 5-7, 6-3, 6-4 என மெக்காா்ட்னி கெஸ்லரை வெளியேற்றினாா்.

கனடாவின் விக்டோரியா போகோ 6-1, 6-1 என ஜொ்மனியின் எவா லைஸையும், ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 7-6 (7/4), 2-6, 7-6 (7/5) என்ற செட்களில் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரையும் தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதிபெற்றனா்.

வியன்னா ஓபன்: ஆடவருக்கான வியன்னா ஓபன் டென்னிஸ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 6-7 (7/9), 6-2 என்ற செட்களில் போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, பிரான்ஸின் காரென்டின் மௌடெட் ஆகியோரும் முன்னேற்றம் கண்டனா்.

ஸ்விஸ் இண்டோா்: ஸ்விஸ் இண்டோா்ஸ் ஆடவா் டென்னிஸிலும், நாா்வேயின் கேஸ்பா் ரூட், பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட், சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமே ஆகியோா் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com