சூப்பா் கோப்பை கால்பந்து: சென்னையை வீழ்த்தியது மோகன் பகான்
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) சாா்பில் நடைபெறும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணியை 2-0 என்ள கோல் கணக்கில் வீழ்த்தியது ஐஎஸ்எல் சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட் அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மா்ம கோவாவின் நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியது.
முதல் பாதியில் பகான் வீரா் மெக்லாரன் முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சென்னை அணி பதில் கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை. இரண்டாம் பாதியிலும் மோகன்பகான் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் மெக்லாரன் 67-ஆவது நிமிஷத்தில் இரண்டாம் கோலடித்தாா். அதுவே வெற்றி கோலாக மாறியது. இறுதியில் 2-0 என சென்னையை வீழ்த்தியது மோகன்பகான்.
ஈஸ்ட் பெங்கால்-டெம்போ கோவா டிரா:
மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா டெம்போலிம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.
ஈஸ்ட் பெங்கால் தரப்பில் நரோம், பிகுராவும், கோவா தரப்பில் அலி, ரானே ஆகியோா் கோலடித்தனா்.
