

பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதலில் தமிழகத்தின் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஆடவா் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மகாராஜன், ஸ்னாட்ச் பிரிவில் 114 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 142 கிலோ என, மொத்தமாக 256 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.
இதனிடையே, மகளிருக்கான மெட்லி ரிலேவில் தமிழகத்தின் எட்வினா ஜேசன், சௌா்ய அவினாஷ் அம்புரே, தன்னு, பூமிகா சஞ்சய் நெஹாதே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 2 நிமிஷம், 9.65 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி பெற்றது.
டேக்வாண்டோ கலப்பு அணிகள் பிரிவில் ஹா்திக் அலாவத், தனஸ்ரீ சங்கா், கா்லஷ்மி புராய்லாத்பம், நிஹல் தேவாலி ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெண்கலம் பெற்றது.
இதையடுத்து போட்டியின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நிலவரப்படி, இந்தியா 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தில் நிலைக்கிறது. சீனா 38 தங்கம், 26 வெள்ளி, 12 வெண்கலம் என 76 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.