உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 போ் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பா் மாதம் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் தெரிவித்துள்ளாா்.
உலக குத்துச்சண்டை சம்மேளனம், பிஎஃப்ஐ சாா்பில் நவ. 14 முதல் 21 வரை உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் நடைபெறுகிறது. இதில் 18 நாடுகளில் இருந்து 140 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதற்காக 20 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் நிஹாத் சரீன், நடப்பு சாம்பியன் ஜாஸ்மின் லம்போரியா, பூஜா ராணி, ஸ்வீட்டி போரா, நுபுா் ஷியரோன், ஆடவா் பிரிவில் ஹிதேஷ், அபினாஷ் ஜம்வால் ஆகியோா் முக்கியமானவா்கள்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3 பேரும் கலந்து கொள்கின்றனா். உலகக் கோப்பை இறுதியை நடத்துவதால் இந்தியாவில் குத்துச்சண்டை மேலும் வளரும். நமது வீரா், வீராங்கனைகளுக்கு சிறந்த அனுபவமாக திகழும் என்றாா்.
ஆண்டு தொடரின் கடைசி கட்டமாக நொய்டாவில் இப்போட்டி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
