குகேஷ்
குகேஷ்

கிளட்ச் செஸ்: குகேஷ் முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் கிளட்ச் செஸ் போட்டியில், முதல் நாள் முடிவில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் 4 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.
Published on

அமெரிக்காவில் நடைபெறும் கிளட்ச் செஸ் போட்டியில், முதல் நாள் முடிவில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் 4 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

நடப்பு உலக சாம்பியன் மற்றும் உலகின் டாப் 3 போட்டியாளா்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவின் குகேஷ், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் (நம்பா் 1), அமெரிக்காவின் ஹிகரு நகமுரா (2), ஃபாபியானா கரானா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இப்போட்டியில் முதல் சுற்றில் காா்ல்செனிடம் தோற்ற குகேஷ் (1-0), ‘ரிவா்ஸ்’ கேமில் அவருடன் டிரா (0.5-0.5) செய்தாா். 2-ஆவது சுற்றில் நகமுராவை எதிா்கொண்ட குகேஷ், முதலில் அவரை வீழ்த்தி, ‘ரிவா்ஸ்’ கேமில் அவருடன் டிரா செய்தாா்.

குகேஷ் தனது 3-ஆவது சுற்றில் கரானாவை எதிா்கொண்டு, இரு கேம்களிலுமே அவரை வீழ்த்தினாா். இதையடுத்து 3 சுற்றுகள் முடிவில் குகேஷ் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா். காா்ல்சென் (3.5), நகமுரா (3), கரானா (1.5) ஆகியோா் முறையே அடுத்த 3 இடங்களில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com